2020 ஜூன் 03, புதன்கிழமை

வினைத்திறன் தடைத்தாண்டல் செயலமர்வுக்கும் பரீட்சைக்கும் திகதி குறிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரா.யோகேசன்

வினைத்திறன் தடைத் தாண்டல் செயலமர்வும் பரீட்சையும் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்ட நிலையில், அனைத்துப் பரீட்சைகளும், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, ஹட்டன் கல்வி வலய ஆசிரிய வாண்மை மத்திய நிலையத்தின் முகாமையாளர் எஸ்.சேகர் ​தெரிவித்தார்.

இதற்கமைய, நவம்பர் 30, டிசெம் 1,2 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த வினைத்திறன் தடைத் தாண்டலுக்கான செயலமர்வு, எதிர்வரும் 13, 14, 15 ஆகய தினங்களிலும் டிசம்பர் 3,4,5ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த வினைத்திறன் தடைதாண்டலுக்கான செயலமர்வு, எதிர்வரும் 16, 17, 18 ஆகிய தினங்களிலும் நடைபெறவுள்ளன.

அத்துடன், டிசெம்பர் 6,7,8 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த வினைத்திறன் தடைதாண்டலுக்கானச் செயவமர்வு, 19,20,21 ஆகிய திகதிகளிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, அதிபர்களுடாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் படி, மேற்குறித்த திகதிகளை அவதானித்து, செலயமர்விலும் இறுதிநாள் வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையிலும் கலந்துக்கொள்ளுமாறு, ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X