2020 ஜூன் 04, வியாழக்கிழமை

1,300 பேர் திண்டாட்டம்

பா.திருஞானம்   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக மேப்பாடுகள் அமைச்சின் ஊடாக, இரண்டாம் மொழியைக் கற்பிப்பதற்காக, 1,300 பேர், பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும், அவர்களுக்கான பயிற்சி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.  

இவர்களுக்கு, மூன்று மாதகால பயிற்சியும், அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும், பயிற்சியின் நிறைவில், மொழிப் பயிற்றுவிப்பாளர் நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இவர்களுக்கு பயிற்சியளித்து வந்தது. இதற்காக, நாட்டின் சகல மாவட்டங்களிலும் பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன. எனினும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பயிற்சிக்காக தம்மை அழைக்கவில்லை என, பயிற்சியில் பங்கேற்ற இளைஞர் யுவதிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். 

அத்துடன், தமக்கு உரிய பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். தாம் ஏற்கெனவே செய்த தொழில்களை கைவிட்டு, இப் பயிற்சியில் ஈடுபட்டமையால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.  

எனவே, விரைவில் இதற்கான தீர்வை உரிய தரப்பினர் தமக்கு வழங்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தமிழ் மொழி மூலம் 800 பேரும், சிங்கள மொழி மூலம் 300 பேரும், ஆங்கில மொழி மூலம் 200 பேரும் இப் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X