2020 நவம்பர் 25, புதன்கிழமை

பெல்வூட் கல்லூரியின் நிலை பரிதாபம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக் கண்டி)

கண்டியில் அமைந்துள்ள பெல்வூட் இளைஞர் நுண்கலைக் கல்லூரி இலங்கையில் மிகச்சிறந்த நுண்கலைக் கல்லூரியாக இருந்த போதிலும் இன்று அதன் நிலமை பரிதாபமானது என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார்.

தற்போது இக்கல்லூரியிலே 60 இற்;கும் குறைவான மாணவ மாணவிகளே கற்கின்ற போதிலும் 40 னர்க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமை புரிகின்றனர் என்றும் கூறினார்.

பெல்வூட் இளைஞர் நுண்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் நடத்திய நடன நிகழ்வில் இளைஞர் விவகாரப் பிரதி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பிரதம அதிதியாகவும் கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபய ஜயரத்ன விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வைபவத்தில் உரையாற்றியப்போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். பார்வையாளர்களை மிகவும்  கவர்ந்த அந்நடனங்களின் சில கட்டங்களைக் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .