Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பேராதெனிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் இருவருடைய சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன.
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த தாய் மகன், மகள் ஆகிய மூவருமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை முதல் காணாமல்ப்போயிருந்த இவர்களைத் தேடும் நடவடிக்கையில் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டிருந்தனர்.
இதன் மூலம் தாய், மகன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றையவரின் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்கிறது.
25 minute ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 Apr 2026