2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அக்குறணையில் வாகன விபத்து: ஒருவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்) 

அக்குறணை, குருகொடை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதான பெண்  ஸ்தலத்திலேயே உயிரிழுந்ததுடன், மேலும் இரண்டு பேர் கடும் காயங்களுடன் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்  43 வயதான அக்குறணை மல்வாஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.எஸ்.நஸீறா ஆவார். உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது அக்குறணை ஸியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X