2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வாக்களிப்பு நிலையங்களின் அறிவுறுத்தல்களை தமிழ்மொழியில் காட்சிப்படுத்த உத்தரவு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.செல்வராஜா  

தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிக்கும் அறிவுறுத்தல்களை, தமிழ்மொழியிலும் காட்சிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்களிப்பு நேற்று நாடாளாவிய ரீதியில் நடத்தப்பட்டது. இவ்வாக்களிப்பு நிலையங்களில், அறிவுறுத்தல்கள் அனைத்தும் சகோதர மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையால், அம்மொழி புரியாத வாக்காளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.   

இவ்விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்கள் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் தெரிவித்ததை தொடர்ந்து, இவ்விடயம் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை அடுத்து, தேர்தல்கள் ஆணையாளர், மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.  

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .