Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால், தலா 12 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 376 வீடுகள், எதிர்வரும் 15 ஆம் திகதி, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக தோட்ட உட்டகட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
100 நாட்கள் திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வீடமைப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பணிகள் தற்போது பூர்த்தியாகியுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, ஹப்புத்தளை, பண்டாரவளை ஆகிய பிரதேங்களில் இவ்வீடமைப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் முற்றிலும் இலவசமாக மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. அந்தந்த பிரதேசங்களிலேயே வீடுகள் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .