2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

7 பொலிஸாருக்கு தொற்று

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி-அங்கும்புரை பொலிஸ் நிலையத்தில் கடமைமையாற்றும் 15 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஏழு அதிகாரிகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், இந்தப் பொலிஸ் நிலையத்தின் பணிகள் அனைத்தும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அனைத்து அதிகாரிகளும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 7 அதிகாரிகளும் குண்டசாலையில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொலிஸ் நிலையத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள். பூஜாபிட்டிய, அலவத்துகொடை பொலீஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .