2021 மே 06, வியாழக்கிழமை

சலனிக்கு உதவுங்கள்

Princiya Dixci   / 2016 ஜூலை 27 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை, இல. 58, பொன்சேகா வீதியில் வசிக்கும் 09 வயதுச் சிறுமியான சலனி  சொய்சா, கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலாவது இருதய அறுவை சிகிச்சை இந்தியாவிலுள்ள சென்னை வைத்தியசாலையில் வைத்தியர் கே.சிவகுமாரினால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இரண்டாவது சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.  இதற்கு 700,000 ரூபாய் தேவைப்படுவதாகவும் சிறுமி மற்றும் பெற்றோருக்கான விமான செலவு மற்றும் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்புவதற்காக 350,000 ரூபாய் தேவைப்படுவதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தந்தையின் வங்கிக்கணக்கில் 16,000 ரூபாய் மாத்திரமே உள்ளதாகவும் பொதுமக்களின் உதவியை நாடுவதைத் தவிர வேறெந்த வழியிலும் தன்னால் இத்தொகையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறுமியின் தந்தையான நாலக சொய்சா தெரிவித்துள்ளார்.

தங்களுடைய விலைமதிப்பற்ற பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு சலனியின் பெற்றோரான நாலக சொய்சா மற்றும் ஷிரந்தி ஹர்ஷன கமகே ஆகியோர் மிகவும் தாழ்மையுடன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே, நன்கொடை வழங்குபவர்கள், பாணந்துறை இலங்கை வங்கியால் பராமரிக்கப்படும் கணக்கு இலக்கம்: 8124458 என்ற கணக்குக்கும் பாணந்துறை சம்பத் வங்கியால் பராமரிக்கப்படும் கணக்கு இலக்கம்: 102657129083 என்ற கணக்கு இலக்கத்துக்கும் நன்கொடைகளை வழங்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .