2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நகரங்கள் வெறிச்சோடின

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இன்று16) அரச, வர்த்தக விடுமுறைத் தினமாக அறிவித்ததையடுத்து,  நீர்கொழும்பு உள்ளிட்ட பல  நகரங்கள் வழமைக்கு மாறாக, வெறிச்சோடி காணப்படுகிறது.  

வீதிகளில் சன நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படுவதுடன், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பிரதான பஸ் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகிறது.  குறிப்பிட்டளவு பஸ்களே, சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நாட்டில் நிலவுவதையடுத்து, பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வருவதுடன்,  அத்தியாவசியத் தேவைக்காக மாத்திரம் வெளியில் செல்வதை அவதானிக்க முடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .