Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
மல்வானை கல்வி முன்னேற்றக்கழகம் 2010ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி, கம்பஹா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான முன்னோடிப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 26ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் 23 தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இருந்து சுமார் 1,200 பரீட்சாத்திகள் இப்பரீட்சையில் தோற்றுவதோடு இவர்களுக்கென 10 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறும் 3 மாணவர்கள் இந்தியாவுக்கான கல்விச் சுற்றுலாவை மேற்கொள்வதற்கும் அதிக புள்ளிகளைப் பெறும் பாடசாலை மற்றும் பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் என பல ஆறுதல் பரிசிகளும் வழங்கப்படவுள்ளதாக கழகத்தின் தலைவர் மொஹமட் ரிப்கான் தெரிவித்தார்.
இப்பரீட்சை வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025
Yoosuf Thursday, 30 September 2010 04:01 AM
ருவான் ஒரு சிறந்த உதாரணம்!
அரசியல் வாதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு
இவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு அவசியம் தேவை.
இப்படிக்கு
யூசுப்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025