2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மேயர் வாசஸ்தலத்திலிருந்து இம்தியாஸ் வெளியேறுகிறார்:ஒமர் காமில்

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கொழும்பு மாநகர மேயர் வாசஸ்தலத்திலிருந்து எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வெளியேறுவதாக முன்னாள் மேயர் இம்தியாஸ் முஹம்மட் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.  

மேயர் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவது குறித்து முன்னாள் மேயர் தனக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியை மேல் மாகான ஆளுநர் அலவி மெளலானவுக்கும் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் மாதம் மேல் மாகாண முதலமைச்சரால் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டது.

எனினும் மாநகர சபை கலைக்கப்பட்டது முதல் இன்று வரை முன்னாள் மேயர் இம்தியாஸ் முஹம்மட் மேயர் வாசஸ்தலத்தில் தொடர்ந்து வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--