A.P.Mathan / 2010 நவம்பர் 11 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(1).jpg)
நேற்று பிற்பகல் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தலைநகரின் பல பாகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத வகையில் தலைநகரின் பல பாகங்கள் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் 400 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று காலை 7 மணிவரை பதிவாகியுள்ளதாக வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தளவு மழைவீழ்ச்சி பதிவாகியமை கடந்த 18 ஆண்டுகளின் பின்னர் இதுவே முதற்தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பின் ஹெட்டியாவத்தை, ஆமர் வீதி, வஜிரா வீதி, ஹெவலொக் வீதி, கறுவாத்தோட்டம், ஆயர்வேத சந்தி, பௌத்தாலோக்க மாவத்தையின் சில பகுதிகள், மருதானை, வார்ட் பிளேஸ், கிறகரி பாதை மற்றும் புறநகர் பகுதிகளான பேலியகொடை, பிலியந்தலை, மொறட்டுவை, பாணந்துறை போன்ற பகுதிகளிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்துவருவதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்று நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறும் அதிபர்களுக்கு கல்வி திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சீரற்ற காலநிலை இன்று மாலைவரை தொடரும் எனவும் இடி, மின்னலின் தாக்கம் காணப்படும் எனவும் இலத்திரனியல் உபகரணங்களை கையாளுகையில் அவதானமாக இருக்கும்படியும் பொதுமக்கள் வேண்டப்படுகிறார்கள். இதேவேளை கொழும்பில் சில பாகங்களில் மின்சார சீரின்மை காணப்படும் எனவும் இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களை அவதானத்துடன் நடந்துகொள்ளும்படியும் கொழும்புக்குள் வருகின்றவர்கள் தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவதால் வாகன நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். Pix by :- Kushan Pathiraja
(1).jpg)
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025