2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மத்திய வங்கி ஆளுநரின் மகன் மீதான தாக்குதல் சந்தேகநபர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாருக் தாஜுதீன்)

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ராலின் மகனை தாக்கி கண்ணில் காயமேற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை இன்று கொழும்பு பிரதான நீதவானால் 75,000 ரூபா பிணையில் விடுவித்தார்.

அடையாள அணிவகுப்பில் சர்வதேச நபரான அஷான் திலின டி சில்வாவை, பாதிக்கப்பட்டவரான சத்திர விஸ்வஜித் கப்ரால் அடையாளம் காட்டினார். இதன் பின்னரே சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டது.

இரண்டு பகுதியினரும் இந்த பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து கொழும்பு பிரதம நீதவான் இந்த வழக்கை இணக்க சபைக்கு பாரப்படுத்துவதாக கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--