Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
இலங்கை அரசுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளின் அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் பல்வேறுபட்ட பொதுச் சேவைகளை வழங்கவுமென சவூதி அரேபியாவைச் சேர்ந்த உயர்மட்ட குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர்.
இக்குழுவினர் வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும், வடகிழக்கு புனர்வாழ்வு தொடர்பாகவும், வடகிழக்கில் அழிக்கப்பட்ட பள்ளிவாயல்களை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அரசாங்கத்தின் அமைச்சர்களோடும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரநிதிகளோடும் ஏனைய அமைப்புக்களோடும் கலந்துரையாட இருக்கின்றனர்.
.jpg)
58 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
23 Nov 2025
23 Nov 2025