Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 27 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் அமைப்பொன்றின் பரிசளிப்பு விழாவில் முன்னான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டதை நம்பி பல மணித்தியாலங்கள் காத்திருந்த மக்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தாக்கிய சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.
'திரிய தருவோ சிறுவர் மன்றத்தின்' பரிசளிப்பு விழா கம்பஹ ஹெனரத்கொட பூங்காவில் நடைபெற்றது. முன்னான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் அதிதிகளாக கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டதை நம்பி, சுமார் 5000 பேர் மக்கள் பல மணித்தியாலங்கள் காத்திருந்தனர்.
ஆனால், விழாமுடிந்தபோதிலும் மேற்படி அதிதிகள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் விழா ஏற்பாட்டாளர்களை தாக்கினர்.
இதையடுத்து, இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் என்று கூறப்படும் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நால்வர் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (லங்கா தீப)
Kethis Sunday, 27 November 2011 09:44 PM
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
Reply : 0 0
Risvi Monday, 28 November 2011 04:09 AM
மக்கள் ஏமாந்தாலும் பாடம் கற்பிக்க மறக்கவில்லை.
Reply : 0 0
nafeel Monday, 28 November 2011 04:12 AM
நல்லது நடந்து இருக்குது. இது எலோருக்கும் ஒரு பாடம்.
Reply : 0 0
chelvin Monday, 28 November 2011 11:06 AM
மர்மங்கள் நிறைந்த காலம்! திரை மறைவில் ஒரு கை!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
14 minute ago
18 minute ago