2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அனுமதி பத்திரமின்றி மதுபானங்களை வைத்திருந்தவர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபானங்களை வைத்திருந்த நபர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பல்லாயிரம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபான வகைகளை மறைத்து வைத்திருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் ஏத்துக்கால பிரதேசத்திலுள்ள ஓய்வு விடுதி ஒன்றில் வேலை செய்பவர் எனவும் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோத மதுபான வகைகளை தனது வீட்டில் வைத்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல கமகேயின் உத்தரவின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஜீனா அஸீம், பொலிஸ் கான்ஸ்டபிள்களான புஷ்பகுமார, ராஜகருணா ஆகியோரை கொண்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .