2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அமெரிக்காவுக்கு அனுப்பப்படவிருந்த அலங்கார மீன்கள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 21 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படவிருந்த அலங்கார மீன்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பிலுள்ள அலங்கார மீன் உற்பத்தி நிறுவனமொன்றினால் சட்டவிரோதமான முறையில் இம்மீன்கள் அனுப்பப்படவிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

'சீட்டன் மடகஸ்காரனிக்ஸ்' என்ற மீனினத்தைச் சேர்ந்த இரண்டு மீன்கள் அடங்கிய பெட்டியொன்றை சோதனையிட்ட போதே அவை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவிருந்தன என்பது தெரியவந்துள்ளது.

குறித்த மீன்களை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .