2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மொரட்டுவை மேயருக்கு பிணை

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை மேயர் உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொட்டுவை பிரின்ஸ் ஒவ்வேல்ஸ் வித்தியாலயத்தில் புதிய அதிபரை கடமைகளை பொறுப்பேற்கவிடாது தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர சபையின் மேயர் லால் பெர்ணன்டோ உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் மொரட்டுவ நீதவான் டப்ளியு அரவிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாரே நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

புதிய அதிபருக்கு அவரது கடமைகளை பொறுப்பேற்பதற்கு இடமளிக்குமாறும் அதற்கு சட்டத்தின் பிரகாரம் இடமிருப்பதாகவும் தெரிவித்த நீதவான் சமாதானத்தை சீர்குலைத்தால் கைது செய்யவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் எச்சரித்து வழக்கை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--