2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

இலங்கையில் விபசாரம் செய்த தாய்லாந்து பெண்கள் கைது

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுபிட்டி-பௌத்தாலோக மாவத்தையில் ஆயுர்வேத மத்தியநிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றைப் பொலிஸார் நேற்று(21) இரவு சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்​போது அங்கிருந்த 3 தாய்லாந்துப் பெண்கள் உள்ளிட்ட 10  பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு அனுமதிக்கமைய இந்த விபசார விடுதியை சுற்றிவளைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் பிலியந்தல, அநுராதபுரம், காலி, களுபோவில, தெல்கொட, கடவத்த, பிபில மற்றும் தெமட்டகொட பகுதிகளைச் சேர்ந்த 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X