2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

கொழும்பின் பல இடங்களில் ஆணுறை இயந்திரங்கள்

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்களின் நன்மைக் கருதி  கொழும்பு நகரின் பிரதான பாதைகளின் இடைநடுவில் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பின் புல்லர்ஸ் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்திலும் மேலும் பல இடங்களிலும் குறித்த ஆணுறை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை பெற விரும்புவர்கள் தமது அலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு அதன்பின்னர் கிடைக்கும் பின் இலக்கத்தை இயந்திரத்தில் செலுத்தி இந்த ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு பெக்கற்றிட்காக அலைபேசி கட்டணம் 50 ரூபாய் அதிகரிப்பதாகவும்,மாதாந்த அலைபேசி கட்டணத்தை செலுத்துபவர்களுக்கே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X