2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

நீர்கொழும்பில் ஓய்வுதியக் கொடுப்பனவு வழங்கும் பணி ஆரம்பம்

S. Shivany   / 2020 நவம்பர் 10 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.சாஜஹான்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுககான  ஓய்வுதியக் கொடுப்பனவு, இன்று (10) வழங்கப்பட்டது.

நீர்கொழும்பு பிரதான தபாலகத்தில் இன்று காலை பத்து மணிக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் பணி ஆரம்பமானது. இதன் காரணமாக, நீண்ட நேரம் வரிசையில் நின்ற ஓய்வூதியர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியதை காண முடிந்துது. அத்துடன், இதுதொடர்பாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிரதான தபாலகம், மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பவற்றில், ஓய்வூதியகாரர்கள் தங்களது ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக்கொண்டனர்.  
கம்பஹா மாவட்டத்தில நாளை மற்றும் நாளை மறுதினம் (11, 12) ஆகிய தினங்களிலும், ஓய்வூதியகாரர்கள் தங்களது ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .