2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு சாகும்வரை சிறை

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட  நபர் ஒருவருக்கு சாகும் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த சுராஜ் குமார என்ற நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

2014 ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி 3.31 கிராம் ஹெரோய்ன் போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணைகளை அடுத்து, தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--