2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் உயிரிழப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

சுத்தமான தண்ணீர் வழங்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த 19 வயதான குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயரிழந்துள்ளார்.

முன்னர் 17 வயதான பாடசாலை மாணவரொருவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் இந்த சம்பவத்தினால் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--