Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
நவாலி - அட்டகிரி பகுதியில், நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனமொன்று ஆகியவற்றைத் தீக்கிரையாக்கியச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை, மானிப்பாய் பொலிஸார், நேற்று (08) இரவு கைது செய்துள்ளனர்.
அட்டகிரி பகுதியில், நேற்று (08) மாலை 4 மணியளவில், 8க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலான்று, முகத்தை துணிகளால் மூடிக் கட்டியவாறு, அங்கிருந்த 4 வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அவ்வீடுகளில் இருந்த உடமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, அவற்றுக்குத் தீ மூட்டியுள்ளனர்.
அத்துடன், வீடொன்றில் இருந்த ஐஸ்கிறீம் விற்பனைக்குப் பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைளை துரிதப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்
2 minute ago
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025