2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

5 அடி நீளமான முதலை மீட்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பண்டத்தரிப்பு, நகர்ப்புறத்தின் பின்பக்கமுள்ள வயல் கிணற்றில் தவறி வீழ்ந்த 5 அடி நீளமான முதலை வியாழக்கிழமை (31) மீட்கப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த ஐந்து நாட்;களுக்கு முன்னர் இந்த முதலை தவறி கிணற்றுக்குள் வீழ்ந்தது. இது தொடர்பில் அப்பகுதி மக்கள் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு அறிவித்த போதும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் இளவாலைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்தனர். அவர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இதனைத் தெரியப்படுத்தி, திணைக்களத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் முதலையை மீட்டுச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X