Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை, தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் இந்தப் பாடசாலையில் நடத்தினர். இதன்போது, துஸ்பிரயோகம் மேற்கொள்ள நினைப்பவர் எவ்வாறான இடங்களில் தொடுகை செய்வார், அதிலிருந்து தப்புவது எப்படி போன்ற விடயங்களை உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்வு முடிவடைந்ததும், சிறுவர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் சென்ற சில மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தங்கள் பாடசாலை அதிபர் தங்களுடன் மேற்கூறியது போல தொடுகை செய்வது மற்றும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் நடப்பதாகவும் கூறினர்.
சிறுவர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இதனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் அதிபர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
52 minute ago