2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

அனைவரையும் வௌியேறுமாறு, யாழ். பல்கலைக்கழகம் உத்தரவு

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந், என்.ராஜ்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து, இன்று பிற்பகல் 2 மணியுடன், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.

அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள், இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏறகெனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெளியேறுமாறு தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .