Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளது.
பழைய மாணவர்கள் ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளதென பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
பழைய மாணவர்கள் சிலருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாக,வே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது என, பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை, பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த பழைய மாணவர்கள் 5 பேர், ஆசிரியரின் கையிலிருந்த பாடப்புத்தகங்களைப் பறித்து வீசி எறிந்துள்ளனர்.
அத்துடன், ஆசிரியரின் கழுத்தை நெரித்து தள்ளிவிட்ட பழைய மாணவர் ஒருவர், அவரை பாடசாலையிலிருந்து வெளியேறுமாறு மிரட்டி தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரால் பழைய மாணவர்களுக்கு எதிராக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட போதும், பின்னர் சமாதானமாகச் செல்வதாக முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளது.
39 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
2 hours ago