2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த இந்திய மீனவர்கள் ஐந்து பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.

கடந்த 03ஆம் திகதி தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகுடன் நுழைந்து நெடுந்தீவுக்கு மேற்கே  குறித்த ஐந்து மீனவர்களும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து உரிய அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என மாவட்ட நீரியல்வளதுறை அதிகாரிகள் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். வழக்கினை விசாரித்த நீதிவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .