2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

George   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காரைநகருக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .