2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

‘எனது அரசியல் பயணம் யானையின் மீதே தொடரும்’

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

யானையின் மீதே தனது அரசியல் பயணம் தொடருமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், வேறு எந்தக் கட்சிக்கும் தான் செல்லமாட்டேனெவும் கூறினார். 

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாகவும் இணையத்தளங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தான் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்டத் தேர்தல் தொகுதியிலேயே போட்டியிடுவேனெனத் தெரிவித்தார். 

தனது மக்களுக்கான சேவை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே இருக்குமெனத் தெரிவித்த அவர், எந்தக் கட்சிப் பக்கமும் தான் செல்லப் போவதில்லையெனவும் கூறினார். 

அதற்கான எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லையெனவும், விஜயகலா எம்.பி கூறினார். 

இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதெனவும், அவர் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .