2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.எம்.எம்.றியால் இன்று திங்கட்கிழமை (28) தீர்ப்பளித்தார்.

சுகாதார பரிசோதகர் பி.சஞ்ஜீவன், ஞாயிற்றுக்கிழமை(27) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஐஸ்கிறீம் வானின் சாரதிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு அபராதம் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X