2021 மே 10, திங்கட்கிழமை

ஒத்துவராத ஆடைகளுடன் வந்த ஆண்களுக்கு அபராதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு கலாசாரத்துக்கு ஒத்துவராத ஆடைகளுடன் வந்த ஆண்கள் ஐவருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார்.

நீதிமன்ற வழக்குக்கு வந்திருந்த நபர்களின் ஆடை தொடர்பில் வியாக்கியானம் தெரிவித்த நீதவான், குறித்த ஐவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த ஐவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான், எதிர்வரும் காலங்களில் இது போன்ற ஆடைகளை அணிந்து நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்க்;குமாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X