Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்குகின்ற வேலைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துச் செயற்படத் தயார் என கூட்டமைப்பு அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று பிகிரங்கமாக அறிவித்திருக்கின்றமை ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. தங்களது நலன்களுக்காக செயற்படுகின்ற கூட்டமைப்பினர் எதனையும் செய்வார்கள் என்பதனை பல தடவைகள் எங்கள் மக்களுக்கும் நாங்கள் சொல்லியும் இருக்கிறம்” என்றார்.
“கடந்த ஜனாதிபதி தேர்தலில் எவரையும் நம்ப முடியாது. எந்தவொரு தரப்பும் வந்து எங்களுக்கு ஒன்றும் செய்யப் போவறதில்லை எல்லாரும் ஒன்று தான் என நினைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கோட்டாபய ராஐபக்ஷ வென்றார் என்றால் தமிழினம் என்றதே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் பயப்பீதியை ஏற்படுத்தி கூட்டமைப்பினர் பிரசாரத்தைச் செய்தனர்.
“அந்தப் பயப்பீதியினால் கோட்டபாயவை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக அவருக்கு எதிராக எமது மக்கள் வாக்களிக்கும் நிலைமையை ஏற்படுத்தினார்கள்.
“ஆனால் தேர்தலில் யாரைத் தோற்கடிக்க வேண்டுமென்று தமிழ் மக்களிடம் வாக்களிக்கச் சொல்லிக் கேட்ட கூட்டமைப்பினர் இன்றைக்கு அவரே வெற்றி பெற்றிருக்கின்ற நிலைமையில் தாங்கள் சொன்ன எல்லாத்தையும் மறந்து போட்டு தங்களது தங்களது சுயநலன்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் அதே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவிக்கிறது.
“இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் தான் சலுகைகளைப் பெறாலம் என்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவிக்கிறார்கள் என்றால் எந்தளவு தூரத்துக்கு முட்டாளாக்குகின்ற வேலையை செய்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்” எனவும், அவர் கூறினார்.
15 minute ago
7 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
7 hours ago
27 Mar 2026