2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

குடியிருக்காதவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல்

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

 

அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு வீடுகளை அமைத்தவர்கள்  அங்கு தொடர்ச்சியாக குடியிருக்காது வீடுகள் பயன்பாடற்று காணப்படுவதால்,  இரண்டு வாரங்களுக்குள் குடியிருக்குமாறும்  தவறும் பட்சத்தில்  வீடற்றவர்களுக்கு வீடுகளை மாற்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, கரைச்சி பிரதேச செயலகத்தால் பயன்பாடற்ற வீடுகளுக்கு முன் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றவர்களில் சிலர் வீடுகளை அமைத்துவிட்டு அங்கு குடியிருக்காது குறித்த வீடுகளை பயன்பாடற்ற வீடுகளாக விட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது எனவும் தொடர்ச்சியாக பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையிலேயே, கரைச்சி பிரதேச செயகலத்தினால் இந்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேசத்தின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் பயன்பாடற்ற வீடுகளுக்கு முன் குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--