2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

குருநகரில் தேடுதல் நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து இன்று, சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம், தெல்லிப்பளை பகுதியிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல்களை முன்னெடுத்திருந்தனர்.

அதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எவையும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--