2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தாக்கம்: யாழ். மாநகர சபையில் விசேட அமர்வு

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்டபட்ட பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டிய அவசர நிலமைகள் தொடர்பில் ஆராயும் முகமாக, யாழ்ப்பாணம் மாநகர சபையால், விசேட அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமர்வு, மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், புதன்கிழமை (18), முற்பகல் 10 மணிக்கு, நடைபெறவுள்ளது.

இதில், மாவட்டச் சுகாதார சேவை திணைக்கள வைத்திய அதிகாரி, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார உத்தியோகத்தர்கள், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, கொரொனா தொற்றுத் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கை, அதனோடு ஒவ்வொரு திணைக்களங்களின் வகிபங்கு, அதனை முன்கொண்டு செல்ல செய்ய வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள், தேவை ஏற்படின் உடனடியாக ஒருங்கிணைந்து முன்கொண்டு செல்ல வேண்டிய பணிகள், அதற்கான உடனடி ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளன.

இது குறித்துக் கருத்துரைத்த மேயர் ஆர்னோல்ட், இதன் தாக்கம் அதிகரித்தால் அல்லது சபை எல்லைப் பரப்புக்குள் இனங் காணப்பட்டால் உள்ளூராட்சி மன்றம் ஆற்ற வேண்டிய பங்குகள், அதன் படிமுறைகள் என அனைத்தும் முற்கூட்டியே திட்டமிடுவதே, இக்கூட்டத்தின் நோக்கமாகவுள்ளதெனத் தெரிவித்தார்.

அதாவது, வரமுன் காப்போம் என்னும் திட்டத்துக்கமைய, இதனை மேற்கொள்வோமெனவும், மேயர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .