Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
முகத்திரைக் கிழிக்க பட வேண்டியது, சுமந்திரன் போன்றவர்களுக்கே அன்றி தமக்கு அல்லவென, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அத்தடன், தங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ, தாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லையெனவும், அவர் கூறினார்.
கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில், இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்பொழுது தேர்தலை மய்யப்படுத்தி பொய்யான பரப்புரைகளை சுமந்திரன் பரப்பி வருகிறாரெனவும் தங்களுடைய முகத்திரையை கிழிக்க வேண்டிய அவசியமில்லையெனவும் கூறினார்.
கடந்த அரசாங்கத்துடன் சுமந்திரன் எவ்வாறு ஒத்து செய்யப்பட்டார், எவ்வளவு தூரம் ரணில் விக்கிரமசிங்கவுடைய அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சித்தாரென்று, அனைவருக்கும் தெரியுமெனவும், சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, யாருடைய முகத்திரையை கிளிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்களெனவும், அவர் கூறினார்.
2 hours ago
8 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
29 Jan 2026