2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிறுமியொருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த  குடும்பஸ்தருக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருட கடுழீயச் சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், செவ்வாய்க்கிழமை (29) தீரப்பளித்தார்.

மட்டுவில் பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தவணை முறையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சாட்சிகள் உரியமுறையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை (29) இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .