2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சி.வியின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் படம் பொறிக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன், மூன்று பேர், கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்படனர்.

குறித்த தேர்தல் சுவரொட்டிகளை, ஓட்டோவில் கொண்டு சென்ற போதே, நேற்று இரவு, காங்கேசன்துறை வீதி - உப்புமடத்தடியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். 
நேற்று இரவு, ஓட்டோ ஒன்றில் வந்தவர்கள், கொக்குவில் பகுதியில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதன் போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவர்களைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, தேர்தல் சுவரொட்டிகளையும் ஓட்டோவையும், பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் பின்னர், சான்று பொருள்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .