Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மே 29 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தபால் திணைக்களத்துக்குரிய காணிகளில் தபால் நிலையங்களை அமைப்பதற்கு 180 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தபால் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்டத்தில் தபால் திணைக்களத்துக்குரிய காணிகள் இருந்தும் நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நிதி இதுவரை காலமும் ஒதுக்கப்படாத காரணத்தினால், தொடர்ந்தும் வாடகை கட்டடங்களிலேயே தபால் நிலையங்களை நடாத்தவேண்டிய நிலை காணப்படுவதாக வடமாகாணத்துக்கு பொறுப்பான அஞ்சல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, அச்சுவேலி, சங்கானை, கைதடி, பண்டத்தரிப்பு மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய தபால் நிலையங்களுக்கு நிரந்தர காணிகள் இருந்தும் அவை தொடர்ந்தும் தனியார் கட்டடத்திலேயே இயங்க வேண்டியுள்ளன.
பல முறை நிரந்தர கட்டடங்கள் அமைப்பதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், இதுவரை காலமும் திறைசேரியினால் நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் இவ் தபால் நிலையங்களை தனியார் நிலையங்களில் கொண்டு நடத்தவேண்டிய தேவை உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காணிகள் இல்லாது அனலைதீவு, கரவெட்டி, கொக்குவில், கோப்பாய், மானிப்பாய், நயினாதீவு, புங்குடுதீவு, தெல்லிப்பளை, கொடிகாமம், உரும்பிராய், வல்வெட்டித்துறை, வேலணை, வசாவிளான், வண்ணார்பண்ணை போன்ற நிலையங்கள் காணப்படுகின்றன.
சொந்த காணிகள் இல்லாத காரணத்தால் மேற்படி 14 தபால் நிலையங்களும் வாடகை கட்டத்திலே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jul 2025
03 Jul 2025
03 Jul 2025