Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (19) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பொலிஸார், போராட்டக்கார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றனர்.
இந்நிலையில் அவர்களைச் சந்திக்காது ஜனாதிபதி திரும்பிச் சென்றிருந்தார்.
இந்நிகழ்வில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தபோதும், போராட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்து, அதனை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago
9 hours ago
03 Jul 2025