2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

திருமண வீட்டில் ​கைவரிசை: சந்தேகத்தில் இருவர் கைது

Editorial   / 2017 மே 29 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இராசவீதி கோப்பாய் பகுதியில், திருமண வீட்டில் இருந்து 9 பவுண் தங்க நகைகள் ஞாயிற்றுக்கிழமை திருட்டு போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட நகையின் பெறுமதி 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளததக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பகுதியில் உள்ள வீட்டில், சனிக்கிழமையன்று திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், திருமண நிகழ்வுக்காக முன்கூட்டியே வீட்டுக்கு வந்த உறவினர்கள் திருமணம் முடிந்த பின்னரும் வீட்டில் தங்கியுள்ள நிலையில், திருட்டு இடம்பெற்றுள்ளது.

நேற்று காலையில் வீட்டு முன்கதவினை திறந்து நபரொருவர் சென்று மோட்டார் சைக்கிளில் பயணித்ததை உறவினர் ஒருவர் கண்டுள்ளதாகவும், எனினும் அதனை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.

வீட்டில் திருட்டு இடம்பெற்றதை அறிந்த உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இராச வீதி பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், வவுனியா பகுதியைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .