2021 ஜனவரி 27, புதன்கிழமை

’நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்பினுடைய பலம் குறைந்துவிடக்கூடாது’

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்பினுடைய பலம் எந்தவிதத்திலும் குறைந்துவிடக்கூடாது. இப்பொழுது இருப்பதை விடவும் அதிகரிக்கப்படவேண்டும். அதற்காக, தமிழ்க் கட்சிகள் யாவும் ஓரணியில், ஒரு முன்னணியில் அணித்திரளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளது.

பொதுத்தேர்தலில் பரீட்சார்த்தமான வேலைகளைச் செய்வதற்கு எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. குழப்புகின்ற வகையில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். சோதித்துப் பார்க்கும் தருணம் இதுவல்லவென அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ள கூட்டமைப்பு, தமிழர்களின் ஒன்றுமையைக் குலைக்கக் கூடாதென வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரன் யாழிலுள்ள தனது இல்லத்தில், இன்று (26) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் தீர்மானித்தால், அதற்கு வெளியேயும் கூட ஒற்றுமையாக நின்று வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், அது இன்றைக்கு இருக்கிற மிகமிக முக்கியமான தேவைப்பாடாகும். அதைக் குழப்புகிற வகையிலே மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றார்.

கூட்டமைப்பிலிருந்து எவரையும், எப்போதும் வெளியேறச் சொன்னது கிடையாது. யாரையும் வரவேற்பதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆகவே, மிக முக்கியமான இந்தக்கால கட்டத்திலே, எங்களோடு இணைந்துகொள்ளுமாறு அனைத்துத் தமிழ்த் தரப்புக்களுக்கும் நாங்கள் பகிரங்க அழைப்பு விடுகின்றோமெனத் தெரிவித்த அவர், இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்தப்பமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .