2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

நெல்லியடி வாள்வெட்டு; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்ட குற்றச்சாட்டில் கைதான 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது. 

கடந்த மாதம் 27ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மூத்தவிநாயகர் கோயில் பகுதிக்கு வந்த சமூகவிரோத கும்பல் ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை வாளாள் வெட்டி காயம் ஏற்படுத்தியிருந்தது. 

இச் சம்பவத்தில் மறுநாள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த நபர்கள் இன்று வரை மட்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சந்தேக நபர்களுக்கு பிணை  வழங்க நெல்லியடி பொலிஸார் ஆட்சேபணை தெரிவித்த நிலையில்,  சந்தேக நபர்களின் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .