2021 மே 15, சனிக்கிழமை

பண மோசடி செய்தவருக்கு 2 வருட கடூழியச் சிறை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வதிரியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் சுமார் 1 மில்லியன் ரூபாய் கடனாகப் பெற்று மோசடி செய்த ஒருவருக்கு இரண்டு வருடங்களுக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட கதிரமரை மகேந்திரம் என்பவருக்கு 1 இலட்சம் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

வதிரியைச் சேர்ந்த கதிரமலை மகேந்திரம் என்பவரிடம் கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி, 1 மில்லியன் ரூபாயைக் வர்த்தக நோக்கத்துக்காக கடனாகப் பெற்ற குறித்த நபர், அதனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார்.

இது தொடர்பில் மகேந்திரம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

தவணை முறையில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .