2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் யாழ். பொது நூலகத்துக்கு ஐம்பதாயிரம் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு, யாழ். பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 

இதனை தமிழ் நாடு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டடிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரே, மாநகர முதல்வர்  இமானுவேல் ஆர்னோல்ட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், வீசிகசீலைகளுக்கும் புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்கான நிதி கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .