2021 மே 10, திங்கட்கிழமை

பாடசாலைக்கு அருகில் மிதிவெடி

Sudharshini   / 2016 ஜூலை 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்லநாயகம் கபிலன், எஸ்.கர்ணன்

புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் மிதிவெடியொன்று இன்று வியாழக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நிலத்தில் ஓரளவு புதையுண்ட நிலையில் காணப்பட்ட இந்த மிதிவெடியை, அவ்வழியே சென்றவர்கள் அவதானித்து பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டனர். விசேட அதிரடிப் படையினரால் மிதிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X