Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில், உரிய அளவில் வழங்கப்படுவதன் அவசியம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக நலன்புரி நிலையங்களை அமைத்தல், அவற்றுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் உலருணவு நிவாரணங்களை உரிய முறையில், உரிய அளவில் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், வீடுகளை இழந்த மற்றும் வீடுகள் சேதமான மக்களுக்கு இயல்பு நிலை தோன்றியதும் வீடுகளை மீள அமைப்பதற்கும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் கூறியுள்ளார்.
மேலும், வெள்ள அபாயங்கள் நிலவும் பகுதிகளை இனங்கண்டு, எதிர்காலத்தில் அவற்றைத் தவிர்க்கும் வகையிலான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago